உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / திருமானூர் கொள்ளிடம் பாலத்தை சீரமைக்க நுகர்வோர் குழு கோரிக்கை

திருமானூர் கொள்ளிடம் பாலத்தை சீரமைக்க நுகர்வோர் குழு கோரிக்கை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூரில் நடந்த தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம், சங்கத்தின் பொதுசெயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. சுயம்பிரகாசம் வரவேற்றார். அருங்கால் கணேசன், காவட்டாங்குறிச்சி சித்ரவேல் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருமழபாடி மணல் குவாரியில் அரசு விதிமுறைகளை மீறி, தனியார் மணல் சேமிப்பு கிடங்கு செயல்படுவதை தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பா சாகுபடியை கருத்தில் கொண்டு, புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை பொதுப்பணித்துறையின் ஆற்று பாசன நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். திருமானூர் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் இணைப்புகள், நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி கொண்டிருக்கிறது. பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான இப்பாலத்தை உரிய முறையில் பராமரித்து பாதுகாக்க, அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருமானூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என, முதல்வரை கேட்டு கொள்வது. வலுவான லோக்பால் மசோதா உருவாக்க வேண்டும் என பாரத பிரதமரை கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க துணை தலைவர் லதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ