உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / அரியலூரில் இன்று ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

அரியலூரில் இன்று ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

அரியலூர்: அரியலூரில் இன்று ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் சின்னப்பா வெளியிட்ட அறிக்கை: அரியலூர் பெருமாள் கோயில் தெருவில் கோயில் தெருவில் உள்ள ஜி.ஆர். திருமண மண்டபத்தில், 26ம் தேதி இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு, கட்சியின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட அவைத்தலைவர் சகாதேவன் தலைமை வகிக்கிறார். மாவட்ட துணை செயலாளர் செல்லப்பா முன்னிலை வகிக்கிறார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா மற்றும் கட்சி கொடி ஏற்றுதல், ம.தி.மு.க., சார்பில் திருநெல்வேலியில் நடக்கவுள்ள செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்த விழா மாநாடு மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில், ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட பிரதிதிகள், கட்சியின் பல்வேறு அணி பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !