மேலும் செய்திகள்
கந்து வட்டி: ஆசிரியை தற்கொலை
12-Sep-2025
பஸ் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு
03-Sep-2025
அரியலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
31-Aug-2025
அரியலூர்: அரியலூர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று நடந்த வாராந்திர பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைகள் சார்பிலான வங்கி கடனுதவிகளை, கலெக்டர் அனு ஜார்ஜ் வழங்கினார். இந்திரா அவாஸ் யோஜனா திட்டம், கல்வி கடன் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி திட்டத்தின்கீழ், 12.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 38 பயனாளிகளுக்கு வழங்கிய கலெக்டர் அனு ஜார்ஜ், 'வங்கிக்கடன் பெற்ற அனைவரும் கடன் தொகையை, உரிய தவணையில் திருப்பிச் செலுத்தி வளமுடன் வாழ வேண்டும்' என கேட்டு கொண்டார். நிகழ்ச்சியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளை மேலாளர் முரளி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர், துணை மேலாளர் ஹேமச்சந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
12-Sep-2025
03-Sep-2025
31-Aug-2025