அரியலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
அரியலுார்: அரியலுார் அருகே, உரிய சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்த, போலி டாக்டரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர், கீழ வீதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 58, என்பவர், தகுந்த மருத்துவ படிப்பு சான்றிதழ் இல்லாமல், அரியலுார் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த கள்ளூர் பாலம் அருகே, மருத்துவம் பார்த்து வந்தார். தகவலறிந்த மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து தலைமையிலான மருத்துவ குழுவினர், பன்னீர்செல்வம் வீட்டை சோதனை செய்தனர். அதில், பன்னீர்செல்வம், பிளஸ் 2 படித்து விட்டு, மருத்துவம் பார்த்தது தெரிந்தது. வீட்டில் மருத்துவ சிகிச்சைக் கான உபகரணங்களும் வைத்திருந்தார். இதையடுத்து, இணை இயக்குநர் மாரிமுத்து புகாரின் படி, கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிந்து, பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.