மேலும் செய்திகள்
ஜோதிடர் கொலையில் இருவருக்கு ஆயுள்
02-Feb-2025
அரியலுார்:அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 67; ஆண்டிமடத்தில் வசித்து வந்த அவர், அதே பகுதி நெடுஞ்சாலை ஓரத்தில் ஹோட்டல் நடத்தி வந்தார்.நேற்று காலை, கடையை திறப்பதற்காக, அவர், 'மாருதி ஆல்டோ' காரில் சென்றபோது, திடீரென காரில் தீப்பிடித்து புகை கிளம்பியது. அன்பழகன் காருக்குள்ளேயே மயக்கமடைந்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. கார் முழுதும் தீப்பற்றி எரிந்ததில், அவர் உடல் கருகி உயிரிழந்தார். ஜெயங்கொண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Feb-2025