உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / எலக்ட்ரீஷியன் வெட்டிக்கொலை வாலிபர் கைது

எலக்ட்ரீஷியன் வெட்டிக்கொலை வாலிபர் கைது

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், ஸ்ரீபுரந்தான், கல்லடி தெருவைச் சேர்ந்தவர் ரவி, 45; எலக்ட்ரீஷியன். இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபுரந்தானை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்ற ரவியை, மர்ம நபர்கள் இருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தப்பினர்.விக்கிரமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முன்விரோத தகராறில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், 30, கொளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்திருப்பதுதெரியவந்தது. விக்கிரமங்கலம் போலீசார் தமிழரசனை கைது செய்தனர், கொளஞ்சியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை