உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / பணம் கொடுத்த நிறுவன ஊழியர் திட்டியதால் வாங்கியவர் தற்கொலை

பணம் கொடுத்த நிறுவன ஊழியர் திட்டியதால் வாங்கியவர் தற்கொலை

தஞ்சாவூர்:அரியலுார் மாவட்டம், கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 44, கூலித் தொழிலாளி; தே.மு.தி.க., நிர்வாகி. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இவர், சில தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று இருந்தாராம். கொரோனா தொற்று காலத்தில், இவரால் சரிவர கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால், கூடுதல் வட்டியுடன் பணத்தை செலுத்துமாறு, பணம் கொடுத்த நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த கோவிந்தசாமி, கடந்த, 15ம் தேதி விஷம் குடித்தார். தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சாவதற்கு முன், 'தனியார் நிதி நிறுவன ஊழியரின், நச்சரிப்பே என் சாவுக்கு காரணம்' என, வீடியோவில் பேசி, சமூகவலைதளங்களில் பதிவை வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !