உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / அரியலுார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பணியாளர்கள் குடியிருப்பை திறப்பது எப்போது?

அரியலுார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பணியாளர்கள் குடியிருப்பை திறப்பது எப்போது?

அரியலுார்:அரியலுார் அரசு கலைக்கல்லுாரிக்கு சொந்தமான, 26 ஏக்கர் நிலத்தில், கடந்த 2020 ஜூலை 7ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, 347 கோடி ரூபாய் மதிப்பில் அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார்.மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை, பயிற்சி டாக்டர், மருத்துவ அலுவலர், உதவி மருத்துவ அலுவலர், செவிலியர் ஆகியோருக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு, 2002 ஜன., 12ல் பிரதமர் மோடி காணொளி வாயிலாக அவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.தொடர்ந்து, 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சேவையை தற்போதைய துணை முதல்வர் உதயநிதி 2023 மார்ச்., 14ம் தேதி தொடங்கி வைத்தார்.இந்நிலையில், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்புகள் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பெரும்பாலும், இங்கு பணியாற்றுவோர் வெளியூரில் இருந்து வருகின்றனர். பணியாளர் குடியிருப்பு திறக்கப்படாத சூழலில், மருத்துவமனைக்கு அருகே உள்ள கிராமங்களில் வாடகைக்கு வீடு பிடித்து தங்குகின்றனர். சமீபத்தில் இவ்வாறு தங்கிய பயிற்சி மருத்துவர், பணி முடிந்து சென்றபோது, சாலை விபத்தில் உயிரிழந்தார்.இதுபோன்ற சிக்கல்களால் பணியாளர்கள் பலரும் பணியிட மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிட்ட பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ளது. மருத்துவமனை பணியாளர் ஒருவர் கூறுகையில், 'பயன்பாட்டிற்கு வராத புதிய குடியிருப்புகளை சுற்றி புதர் மண்டிக் கிடப்பதால், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ள குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.அரியலுார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் முத்துகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்க, அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை