| ADDED : ஜூன் 11, 2024 08:45 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே மதுராந்தகம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து நீர்பெயர் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது.இந்த சாலையை தொன்னாடு, நீலமங்கலம், மேல்வசலை, கீழ்வசலை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.சாலை நடுவே, ஏரி உபரிநீர் கால்வாயை கடக்கும் தரைப்பாலம் இருந்தது. மழைக்காலத்தில் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.ஆகையால், தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பாக வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, 1.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 10.75 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.