மேலும் செய்திகள்
எண்ணுார் துறைமுகத்தில் 1ம் எண் கூண்டு ஏற்றம்
01-Sep-2024
மீஞ்சூர் : மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று அதிகாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இது ஆந்திர மாநிலத்தின் வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து, கலிங்கப்பட்டினம் பகுதியில் கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை குறிக்கும் வகையில், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில், நேற்று ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.
01-Sep-2024