உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊரப்பாக்கத்தில் டேங்கரில் கார் மோதி 2 மாணவர்கள் பலி; மூவர் படுகாயம்

ஊரப்பாக்கத்தில் டேங்கரில் கார் மோதி 2 மாணவர்கள் பலி; மூவர் படுகாயம்

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று அதிகாலை கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில், இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் பயணித்த இரு மாணவியர், ஒரு மாணவர் படுகாயமடைந்தனர்.ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனிஷ் ரெட்டி, 20. இவர், கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலையில் பி.டெக்., மூன்றாமாண்டு படித்து வந்தார்.இவர், தன் நண்பர்களான ஸ்ரேயர்ஸ், 21, ஹரிணி, 21, உமா, 20, மற்றும் முகமத் ஜெனித், 19, ஆகிய நால்வருடன், நேற்று அதிகாலை 1:15 மணியளவில், வல்லாஞ்சேரியில் இருந்து, ஊரப்பாக்கம் நோக்கி காரில் சென்றார்.ஊரப்பாக்கம் டீ கடை பேருந்து நிறுத்தம் அருகே, முன்னாள் சென்ற டேங்கர் லாரியை முந்திச் செல்ல முயன்ற போது, டேங்கர் லாரியின் பின் பக்கத்தில், கார் படுவேகத்துடன் மோதியது.இதில், காரை ஓட்டி வந்த டேனிஷ் ரெட்டி, காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த ஸ்ரேயர்ஸ் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.பின் இருக்கையில் அமர்ந்திருந்த உமா, ஹரிணி, முகமத் ஜெனித் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.விபத்து பற்றிய தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த இரு மாணவியர் மற்றும் ஒரு மாணவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.விபத்தில் பலியான இரு மாணவர்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி