உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 32 விமான சேவை மழையால் பாதிப்பு

32 விமான சேவை மழையால் பாதிப்பு

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.இதனால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வர வேண்டிய 32 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மதுரை, மும்பை, டில்லி, விசாகப்பட்டினம், ஹைதராபாத், கோவை, லக்னோ, டாக்கா உள்ளிட்ட 17 விமானங்கள், தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டிருந்தன.எரிபொருள் குறைவாக இருந்ததால், விசாகப்பட்டினம், கோவை, டில்லி ஆகிய மூன்று விமானங்கள் பெங்களூருவுக்கும், மதுரை விமானம் திருச்சிக்கும், திருப்பி விடப்பட்டன. மழை நின்றதும், ஒன்றன் பின் ஒன்றாக, மற்ற விமானங்கள் தரையிறக்கப்பட்டன.சென்னையில் இருந்து டில்லி, கொச்சி, திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத், பெங்களூர், சிங்கப்பூர், குவைத், துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 15 விமானங்கள், 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி