பொது பிளஸ் 2 ஆங்கில தேர்வு 598 மாணவர்கள் ஆப்சென்ட்
செங்கல்பட்டு:தமிழகம் முழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடக்கிறது.இதில் ஆங்கிலத் தேர்வு நடத்தப்பட்டது.செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 78 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 20 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள், 141 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 239 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.இதில், 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த மையங்களில், பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எழுத 14,632 மாணவியர், 13,100 மாணவர்கள், 242 தனித் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இதில் நேற்று, 14,517 மாணவியர், 12,638 மாணவர்கள் மற்றும் 221 தனித்தேர்வர்கள் மட்டுமே ஆங்கிலத் தேர்வு எழுதினர்.474 மாணவர்கள், 124 மாணவியர் என, மொத்தம் 598 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஏற்கனவே, கடந்த 3ம் தேதி நடைபெற்ற தமிழ் தேர்வுக்கும், 232 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.