உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 73 அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சக பதக்கம்

73 அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சக பதக்கம்

சென்னை: தமிழக காவல் துறையில், 25 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித தண்டனைகளுமின்றி, சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பதக்கங்கள் வழங்கப்படவில்லை. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தால் கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் 2020 -21ம் ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, சென்னை காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணி செய்யும் அதிகாரிகள் மற்றும் போலீசார், 73 பேருக்கு 'அதி உத்கிரிஷட் சேவா, உத்கிரிஷ்ட் சேவா' பதக்கங்கள் வழங்கப்பட்டன. பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சிலர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பதக்கத்தை பெற்றுக்கொண்டனர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த பதக்கங்களை கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர் வழங்கினார். துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, அன்வர் பாஷா, ஜெயங்கரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை