உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதருக்குள் மறைந்த சமுதாய நலக்கூடம் 15 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பணி

புதருக்குள் மறைந்த சமுதாய நலக்கூடம் 15 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பணி

சித்தாமூர் : சித்தாமூர் அருகே உள்ள இரும்புலி ஊராட்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரும்புலி, சிறுகரணை, பெரும்பாக்கம், இந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய நலக்கூடம் இல்லை.அதனால், இப்பகுதியில் வசிப்போர், தங்களது குடும்பங்களில் நடக்கும் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த சிரமப்பட்டனர்.நிகழ்ச்சிகளை நடத்த மண்டபம் தேடி, சித்தாமூர், அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்குள்ள மண்டபங்களில் அதிகப்படியான பணம் கேட்பதால், ஏழை, எளிய மக்கள் அவதிப்படுகின்றனர்.அதனால், இரும்புலி ஊராட்சியில், சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன், அரசு உயர்நிலைப் பள்ளி அருகே சமுதாய நலக்கூடம் கட்டும் பணி துவங்கப்பட்டது. 75 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், பணி கிடப்பில் போடப்பட்டது.ஆனால் தற்போது வரை, சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இரும்புலி ஊராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சமுதாயநலக்கூடம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ