உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 10 டன் குட்கா கடத்திய தலைமறைவு குற்றவாளி கைது

10 டன் குட்கா கடத்திய தலைமறைவு குற்றவாளி கைது

பூந்தமல்லி : பெங்களூருவில் இருந்து பூந்தமல்லிக்கு, கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 டன் குட்கா புகையிலை பொருட்கள், கடந்த 27ம் தேதி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.பூந்தமல்லி போலீசார், லாரி ஓட்டுனர் விக்னேஷ், 27, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான செந்தில், 38, என்பவரை தேடி வந்தனர்.இந்நிலையில், பூந்தமல்லி அரசு மருத்துவமனை அருகே சுற்றித் திரிந்த செந்திலை, பூந்தமல்லி தனிப்படை போலீசார், நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை