உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி கேபிள் பதிப்பதில் அடாவடி

பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி கேபிள் பதிப்பதில் அடாவடி

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டு நல்லுார் ஊராட்சி, பெருமாட்டுநல்லுார் கூட்டுச்சாலையில் இருந்து, காயரம்பேடு வரை உள்ள நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி, ஏர்டெல் தனியார் நிறுவனம். கேபிள்களை பதித்து வருகிறது.இவ்வாறு பள்ளம் தோண்டி கேபிள்கள் பதிக்கும் இடத்தில் தோண்டப்பட்ட குழியை சரியாக, மூடாமலும் கேபிள்களை சரியாக அமைக்காமல் சாலையில் நீண்டு கொண்டு, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது.மேலும் தோண்டிய பள்ளங்கள் சரியாக மூடாததால், அவ்வழியாக செல்லும், கனரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் தெரிவித்ததாவது.சில நாட்களாக, நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் இரவு நேரத்தில் ஏர்டெல் நிறுவன ஊழியர்கள் சாலையில் பள்ளம் தோண்டி, கேபிள்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும். அவர்கள் இப்பணியை சரியாக செய்யாததால், அவ்வழியாக, செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதோடு, காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர்பாக,மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !