மேலும் செய்திகள்
காலாவதியான மருந்துகளை கிணற்றில் வீசியது யார்?
04-Sep-2024
சித்தாமூர் : சூணாம்பேடு அருகே இல்லீடு கிராமத்தில், நியாய விலை கடை அருகே பழுதடைந்த கிணறு உள்ளது.அது, பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. கிணற்று நீர் துவர்ப்பு தன்மையுடன் இருந்ததால், சில ஆண்டுகளில் கைவிடப்பட்டது.இந்நிலையில், கிணற்றின் தடுப்பு சுவர்கள் இடிந்து, தற்போது திறந்த நிலையில் உள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கிணற்றில் விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.மேலும், பயன்பாடு இல்லாத கிணற்றில் உள்ள நீர், துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கிணற்றுக்கு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
04-Sep-2024