உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் தனியார் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில், போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.தண்டலத்தில் துவங்கிய பேரணி ஓ.எம்.ஆர்., சாலை வழியாக சென்று, திருப்போரூர் ரவுண்டானாவில் முடிவடைந்தது.இந்த பேரணியில், போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மாணவர்கள் கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணி முடிந்த பின், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, மாணவர்களிடம் போதை பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை