உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பரம்பரை வழிசாரா அறங்காவலர்கள் செங்கையில் விண்ணப்பம் வரவேற்பு

பரம்பரை வழிசாரா அறங்காவலர்கள் செங்கையில் விண்ணப்பம் வரவேற்பு

மாமல்லபுரம்:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில், பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமிக்க, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், ஹிந்து மத கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் ஆகியவை நிர்வகிக்கப்படுகின்றன. கோவில்கள், வருமானம் சார்ந்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.ஓராண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவை, பிரிவு 46(3); 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஈட்டுபவை 46(2); 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ஈட்டுபவை, 46(1) ஆகியவை, மண்டல இணை ஆணையர் நிர்வாகத்தின்கீழ் உள்ளன.ஆண்டு வருவாய், 10,000 ரூபாய்க்கு மேல் ஈட்டுபவை, பிரிவு 49ல், உதவி ஆணையர் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.இணை ஆணையர் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோவில்களில், பரம்பரை முறை வழிசாராத அறங்காவலர்களை நியமிக்க, அறநிலையத்துறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோவில், செட்டிப்புண்ணியம் தேவநாதசுவாமி கோவில் ஆகியவற்றில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கைலாசநாதர், தட்சிணாமூர்த்தி கோவில், சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் நியமிக்கப்பட உள்ளதாக, அறநிலையத் துறை அறிவித்துள்ளது.காஞ்சிபுரம் இணை ஆணையர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உதவி ஆணையர்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர் பகுதிகளின் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பம் பெற்று, நேரடியாக அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம்.அதோடு www.tnhrce.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என, அறநிலையத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க, ஜூலை 11 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ