மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
9 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
9 hour(s) ago
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, வேணுகோபால் தெருவில் வசிப்பவர் பூபதி, 65. இவர், கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:என் தாய் சின்னம்மாள், வயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டார். இறப்பதற்கு முன், அவர் பெயரில் உள்ள 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முறையாக உயில் எழுதி, அதை பதிவு செய்துவிட்டார்.உயிலில் குறிப்பிட்டுள்ளபடி, சொத்துக்களை நாங்கள் பிரிப்பதற்கு முயன்றபோது, அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது.அது தொடர்பாகவிசாரித்தபோது, என் உறவினரான நந்திவரத்தைச் சேர்ந்த ராமசாமி, புவனேஸ்வரி, அரவிந்தன், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த நீலா, கூடுவாஞ்சேரியை சேர்ந்த கெங்காதரன் ஆகியோர் இணைந்து, என் தாய் பெயரில் போலியான இறப்பு, வாரிசு சான்றிதழ்களை பெற்று, சொத்தை அபகரிக்க முயற்சிசெய்தது தெரிந்தது.போலியான ஆவணம் தொடர்பாக, சான்றிதழ்கள் தொடர்பான உண்மைத் தன்மை அறிக்கையில், அது போலியானது என, தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சான்று வழங்கியுள்ளனர்.எனவே, போலியான சான்றிதழ்கள் வாங்கி, சொத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago