உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை சிற்ப வளாகத்தில் ட்ரோன் கேமராவிற்கு தடை

மாமல்லை சிற்ப வளாகத்தில் ட்ரோன் கேமராவிற்கு தடை

மாமல்லபுரம், : மாமல்லபுரத்தில், பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, குடவரைகள் உள்ளிட்ட பாரம்பரிய சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள சிற்பங்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணியர், உரிய அனுமதி பெறாமல், மொபைல் போன் கேமரா, பிற நவீன கேமராக்களில், சிற்பங்களை படம் எடுக்கின்றனர்.மேலும் 'ட்ரோன்' கேமராவில், சட்டவிரோதமாக வீடியோ படம் பிடிக்கின்றனர். சிற்ப பகுதிகளில், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான விளம்பர பதாகைகள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், உரிய அனுமதியின்றி சிற்பத்தை படம் எடுப்பது, 'ட்ரோன்' கேமராவில் படம் பிடிப்பது, சிற்பத்தில் ஏறுவது, சிற்ப வளாகம் மற்றும் சிற்ப பகுதி நடைபாதை வியாபாரம், தீப்பற்றும் பொருட்கள் மற்றும் விளம்பர பதாகை வைக்க தடை விதிப்பதாக, தொல்லியல் துறை அறிவித்துள்ளது.மேலும், உயர்திறன் கேமரா புகைப்படம், வர்த்தக வகை புகைப்படம், திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பு, ட்ரை - பாட் பயன்பாடு, சிற்ப வளாகத்தில் கள ஓவியம் வரைவது, பிரமுகர் வாகன நுழைவு அனுமதி ஆகியவற்றுக்கு, அத்துறையிடம் முன் அனுமதி பெறவும் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை