உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புவனேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

புவனேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சி, அய்யனார் நகரில், புதிதாக புவனேஸ்வரி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கோ பூஜை, நவக்கிரஹ பூஜை, கணபதி ஹோமம், ஹோமம், நவக்கிர ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மங்கல இசை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்து வார்ச்சனை, காலை 8:00 மணிக்கு, கோபுர கலசத்திற்கும், பரிவார மூர்த்திகள் மற்றும் நவக்கிரகத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.பின், காலை 9:00 மணிக்கு, புவனேஸ்வரி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகமும், அலங்கார விசேஷ மஹா தீபாராதனையும் நடந்தது.விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், புவனேஸ்வரி அம்மன் வீதியுலா சென்றார். விழாவிற்கான ஏற்பாட்டினை புவனேஸ்வரி அம்மன் விழா குழுவினர், அய்யனார் நகர் மக்கள் செய்தனர்.

சூணாம்பேடு

சூணாம்பேடு பஜார் பகுதியில் பழமையான பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர், இரண்டு ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர்.திருப்பணிகள் முடிந்ததை அடுத்து கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் 21ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்ததை அடுத்து, நேற்று காலை 9:15 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவில் கோபுர விமானத்திற்கும், 9:30 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ