மேலும் செய்திகள்
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
26-Feb-2025
செங்கல்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில், குடும்ப அட்டைதாரர்கள் உரிமத்தை விட்டுக் கொடுக்க, இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தலின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், நியாய விலைக் கடைகளில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள்,அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில், உரிமத்தை விட்டுக் கொடுக்கலாம்.இது தொடர்பாக, தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளத்தின் ( www.tnpds.gov.in) வாயிலாக, குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்.மேலும், பொது விநியோக திட்டத்தின் வாயிலாக அத்தியாவசிய பொருள்கள் பெற விருப்பமில்லாத நபர்கள், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளம் (www.tnpds.gov.in) மற்றும் M0bile App) வாயிலாக பதிவு செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
26-Feb-2025