ஆத்துாரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்
அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்துார் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஆத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட நடுத்தெரு, அதிக வீடுகள் நிறைந்த பகுதி.அப்பகுதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை, நாளடைவில் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. புதிதாக சிமென்ட் சாலை அமைக்க ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வாயிலாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 2023-- 24ம் நிதியாண்டில், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது.