மேலும் செய்திகள்
மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
03-Sep-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கூடுதல் எஸ்.பி., வேல்முருகனிடம், ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ணன் என்பவர், மனு அளித்தார். அந்த மனுவின் விபரம் வருமாறு:தனக்கு சொந்தமான லாரி மற்றும் சுதாகர், ரவி, செல்வராஜ், பாக்கியராஜ், பாபு, கார்த்திகேயன், ராஜேஸ்வரி உள்ளிட்டோருக்கு சொந்தமான, 15 லாரிகளை, திண்டிவனம் நங்குணம் பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரிடம், மாத வாடகைக்கு, கடந்த மே மாதம் 26ம் தேதி ஒப்படைத்திருந்தோம்.இதற்கு, வாயலுார் கிராமத்தைச் சேர்ந்த தீனா, கூவத்துார் அடுத்த கீழார்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் சேகர் ஆகியோர் உதவி செய்தனர்.மாதந்தோறும் தலா 1.20 லட்சம் ரூபாய் வாடகை தருவதாக கூறினார். ஆனால், இதுவரை வாடகையும் முறையாக வரவில்லை. வாயலுார் கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவர் வாயிலாக, கடந்த மாதம் 30ம் தேதி, லாரிகளை விற்பனை செய்துவிட்டதாக தெரிந்தது.வாடகைக்கு அளிக்கப்பட்ட லாரிகளை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, லாரிகளை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கூடுதல் எஸ்.பி., வேல்முருகன் தெரிவித்தார்.
03-Sep-2024