மேலும் செய்திகள்
கருத்து கேட்பு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
23-Feb-2025
செய்யூர், செய்யூர் அருகே உள்ள பெரிய வெண்மணி கிராமத்தில், 9.98 ஏக்கர் மற்றும் 13.66 ஏக்கர் பரப்பளவில் 2 கல்குவாரிகள் செயல்பட உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக சுற்றி உள்ள கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.புத்துார் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன் , மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், கனிம வளத்துறை உதவி இயக்குனர் பங்கேற்றனர்.கல்குவாரி அமைய உள்ள இடம், வேலைவாய்ப்பு, திட்ட வரைபடம் மற்றும் செயல் திட்டம் குறித்து எல்.இ.டி., திரையில் விளக்கப்பட்டது.தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் காற்று மற்றும் நிலத்தடிநீர் பாதிக்காத வகையில் கல்குவாரி இயக்கவும், லாரிகள் மெதுவாக செல்லவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், சுற்றுவட்டார கிராமங்களில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
23-Feb-2025