கச்சேரி விநாயகர் கோவில் அமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில் கூட்ரோடு அருகே, கச்சேரி விநாயகர் கோவில் இருந்தது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.செய்யூரில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வரும் நிலையில், பஜார் வீதியில் இருந்த கச்சேரி விநாயகர் கோவில் விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்தது.இதன் காரணமாக, கடந்தாண்டு மே மாதம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், ஹிந்து அறநிலையத் துறைக்கு நஷ்டஈடு வழங்கி, கச்சேரி விநாயகர் கோவில் அகற்றப்பட்டது.தற்போது கால்வாய்கள் அமைத்து, சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு மீதமுள்ள இடத்தில், விநாயகர் கோவில் அமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.