உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகரில் குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்

மறைமலை நகரில் குழாய் உடைந்து பல மாதங்களாக வீணாகும் குடிநீர்

மறைமலை நகர் : -மறைமலை நகர் நகராட்சி, 21வது வார்டு பகுதியில், சின்ன செங்குன்றம், இந்திரா கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு, செங்குன்றம் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குழாய் இணைப்புகள் வழியாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.இந்த குழாய் இணைப்புகள் செல்லும் மெல்ரோசாபுரம் - சின்ன செங்குன்றம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.இதன் காரணமாக, குடியிருப்புகளுக்கு செல்லும் தண்ணீரின் அளவு குறைவதால், பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து பொது மக்கள் கூறுகையில், ”குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 மாதங்களை கடந்த நிலையில், இதுவரை நகராட்சி உடைப்பை சரிசெய்ய முன்வரவில்லை. அதனால், தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது,” என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை