உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தடுப்புச்சுவர் இல்லாத தரைப்பாலத்தால் அச்சம்

தடுப்புச்சுவர் இல்லாத தரைப்பாலத்தால் அச்சம்

மறைமலைநகர்:மறைமலைநகர் -- கோவிந்தபுரம் சாலை, 5 கி.மீ., தூரம் உடையது. கருநிலம், மருதேரி, கொண்டமங்கலம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி மறைமலைநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால், அனைவரும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையில் கோகுலாபுரம் பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.மழைக்காலங்களில், இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதன் காரணமாக, மண் அரிப்பு ஏற்படும். தரைப்பாலத்தில் தடுப்புகள் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, தரைப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை