உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெடரேஷன் கோப்பை கிரிக்கெட் தமிழக அணிகள் பங்கேற்பு

பெடரேஷன் கோப்பை கிரிக்கெட் தமிழக அணிகள் பங்கேற்பு

சென்னை:பெடரேஷன் கோப்பைக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில், தமிழக இருபாலர் அணிகள் பங்கேற்கின்றன.இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் கூட்டமைப்பு சார்பில், 31வது தேசிய அளவிலானபெடரேஷன் கோப்பைக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகள், நாளை துவங்க உள்ளன.இப்போட்டிகள், பஞ்சாப் மாநிலம், அமிர்த சரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலையில் நடக்கின்றன.இதில், ஆடவரில் உ.பி., - தமிழகம், புதுச்சேரி, கேரளா, கோவா, மகாராஷ்டிரா உட்பட எட்டு அணிகளும், பெண்களில் ராஜஸ்தான், தமிழகம், சத்தீஷ்கர் உட்பட தேசிய அளவில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகளும் பங்கேற்றுள்ன.போட்டிகள், வரும் 21ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை