கஞ்சா விற்ற ரவுடி கைது 1.15 கிலோ பறிமுதல்
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆதனூர் சாலையில், கஞ்சா விற்பனை நடப்பதாக, ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்ற ஓட்டேரி போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோடினர். அப்போது, சாலையில் தவறி விழுந்து, படுகாயமடைந்த ஒருவரை போலீசார் பிடித்தனர்.அதன்பின், மருத்துவமனையில் சேர்த்து, பின் காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், வண்டலூர் ஓட்டேரியை சேர்ந்த சிலம்பு என்ற சிலம்பரசன், 30, என தெரியவந்தது. இவர் ஏற்கனவே தேடப்படும் குற்றவாளி.தப்பியோடிய மற்றொருவர், அம்பேத்கர் நகர் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த மணி என்ற பிகில் மணி, 32, என தெரிந்தது. இவரை கைது செய்த போலீசார், 1.150 கிலோ கஞ்சா, ஒரு கத்தி மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்வற்றை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மணியை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர்.