உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மீடியனில் மோதிய லாரியால் மாத்துாரில் கடும் நெரிசல்

மீடியனில் மோதிய லாரியால் மாத்துாரில் கடும் நெரிசல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, மீடியனில் மோதி சாலையின் நடுவே நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.செங்கல்பட்டில் இருந்து, கரி துகள்களை ஏற்றிக்கொண்டு சோளிங்கருக்கு நேற்று மதியம் லாரி ஒன்று சென்றது. சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும் புதுார் நெடுஞ்சாலையில் உள்ள மாத்துார் அருகே வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே உள்ள மீடியனில் மோதி நின்றது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார், நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர்செய்து, மீடியனில் சிக்கியலாரியை அப்புறப் படுத்தினர். இதனால்,ஸ்ரீபெரும்புதுார் -- சிங்க பெருமாள் கோவில் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ