உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரத்தில் உங்களை தேடி; உங்கள் ஊரில் திட்ட முகாம்

நந்திவரத்தில் உங்களை தேடி; உங்கள் ஊரில் திட்ட முகாம்

கூடுவாஞ்சேரி:வண்டலூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடந்தது.அதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் 750க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மனுக்களை வழங்கினர்.அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களில் கையொப்பமிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அவற்றை தாசில்தார் புஷ்பலதாவிடம் வழங்கினார்.கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முன்னதாக, வண்டலுார் உயிரியல் பூங்காவில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, மண்ணிவாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ