வெங்கப்பாக்கம் பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்குகிறது. பள்ளி வகுப்பறை கட்டடம் சீரழிந்த நிலையில் இருந்ததால், அது இடித்து அகற்றப்பட்டது.இதையடுத்து, புதிய கட்டடம் கட்ட வலியுறுத்திய நிலையில், சென்னை அணுமின் நிலையம், அதன் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், 1.48 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டியது.இக்கட்டடம், தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என, தலா இரண்டு வகுப்பறைகளுடன் கட்டப்பட்டுள்ளது.திறப்பு விழாவில், இந்தியன் அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் ராஜேஷ், வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார். அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, தலைமையாசிரியை பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.