செய்யூரில் கொள்முதல் நிலையங்கள் துவக்கம்
செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட, லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியங்களில், 84 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 30,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.இப்பகுதியில், அதிகபடியாக சம்பா பருவத்தில், நெல் மற்றும் மணிலா பயிர் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அடுத்த படியாக, சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிடப்படுவது வழக்கம்.மே மாதம், சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல், தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய, பவுஞ்சூர் பகுதியில் 6, சித்தாமூர் பகுதியில் 4 என, செய்யூர் வட்டத்தில் மட்டும், மொத்தம் 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.இந்நிலையில், நேற்று செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, செய்யூர் பகுதியில் செயல்பட உள்ள 10 நெல் கொள்முதல் நிலையங்களையும் துவங்கி வைத்தார்.