உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவடிசூலத்தில் சிறுபாலப்பணி ரூ.2 கோடி நிதியில் துவக்கம்

திருவடிசூலத்தில் சிறுபாலப்பணி ரூ.2 கோடி நிதியில் துவக்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலம் - தெற்குபட்டு வரை, ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள சாலை வழியாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்வோர் மற்றும் மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வோர் பயணிக்கின்றனர்.அதுமட்டும் இன்றி, திருவடிசூலத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.ஆனால், இச்சாலை சீரழிந்து, போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறியுள்ளது. சீரழிந்த சாலை, கற்கள் பெயர்ந்து, கரடுமுரடான அபாய பள்ளங்களுடன், மேலும் சீரழிகிறது. இந்த பள்ளங்களில், இருசக்கர வாகனங்களில் ஏறி இறங்கும்போது, விபத்துகளில் சிக்கி வாகன ஓட்டிகள் படுகாயமடைகின்றனர். இதனால், சாலையை சீரமைக்கக் கோரி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.இதைத் தொடர்ந்து, சிறுபாலம், புதிதாக தார்ச்சாலை அமைக்க, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து, 2 கோடி ரூபாய் நிதி, கடந்த மார்ச் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இப்பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்து பணிகளை செய்து வருகின்றனர். இப்பணி, மழைக் காலத்திற்குள் முடிக்கப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை