உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி

மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த காயார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஹிந்துஸ்தான் நிகர்நிலை பல்கலையின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.முகாமில், பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்துதல், சுவருக்கு வண்ணம் தீட்டுதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், பொது மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.மேலும், மாணவர்களுக்கு துாய்மை இந்திய என்ற தலைப்பில், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு, ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை