உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு : பெண்கள் முன்னேற்றத்திற்காக சேவையாற்றியவர்கள், தமிழக அரசின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்கள் முன்னேற்றத்திற்காக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு, இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் விருதுகள் வழங்க உள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றிவரும், தகுதியான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை புரிந்துவரும் சமூக சேவர்கள், தமிழ்நாடு அரசின் விருதுகள் பெற, https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக வரப்பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்யவேண்டும்.இத்துடன், சமூக சேவகர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து, குற்றவியல் நடவடிக்கை எதுவும் இல்லை என்பதற்கான சான்று அளிக்க வேண்டும்.சேவை பற்றிய புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், தனித்தனியாக மூன்று பிரதி தொகுப்புகளை தயார் செய்து, வரும் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள், செங்கல்பட்டு சமூக நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ