உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படூரில் வரும் 22ல் வேலை வாய்ப்பு முகாம்

படூரில் வரும் 22ல் வேலை வாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், படூரில் வரும் 22ம் தேதி நடக்கிறது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும் 22ம் தேதி, மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், கேளம்பாக்கம் அடுத்த படூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.இந்த முகாமில், 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள், 20,000க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். விவரங்களுக்கு, 044- 27426020- 94868 70577 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி