உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாநில மினி மாரத்தான் கிருஷ்ணா கல்லுாரி அபாரம்

மாநில மினி மாரத்தான் கிருஷ்ணா கல்லுாரி அபாரம்

காஞ்சிபுரம் : தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரம் துறை சார்பில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.போட்டிகள் செங்கல்பட்டு சப் - கலெக்டர் விளையாட்டு திடலில் நடந்தது. இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். ஆடவரில் 300க்கும் மேற்பட்டோரும், மகளிரில் 200க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர். இதில், மகளிரில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியில் உள்ள காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை, முதலாமாண்டு மாணவி சி.வினிதா முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.ஆடவரில், காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை முதலாம் ஆண்டு மாணவர் வி.சுரேஷ் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.மினி மாரத்தானில் அசத்திய மாணவ - மாணவியரை கல்லுாரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை