உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.127.29 கோடி கடன் உதவி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.127.29 கோடி கடன் உதவி

மதுராந்தகம் : வையாவூரில் உள்ள தனியார் கல்லுாரியில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது.இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, 979 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 127.29 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கினார்.பின், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய், துணிப்பைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், கூடுதல் ஆட்சியர் அனாமிகா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன இணை இயக்குனர் லோகநாயகி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி