உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண் சடலம்

பொது கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண் சடலம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் செங்கல்பட்டு, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த துரை‍,40, என தெரிந்தது.மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் துரைக்கு, மது பழக்கத்தால் அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று முன்தினம் இந்த பகுதியில் நடந்து சென்ற போது, கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தது தெரிந்தது.அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ