மேலும் செய்திகள்
52 இந்திரா உணவகங்கள் பெங்களூரில் கட்டப்படுமா?
07-Feb-2025
மதுராந்தகம், செங்கல்பட்டு, மாமண்டூரில் செயல்பட்டு வந்த பயணவழி உணவகத்தை காலி செய்ய கோரி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மாமண்டூரில் செயல்பட்டு வந்த தந்தை பெரியார் பயணவழி உணவகத்தை தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வந்தனர்.உணவகத்தில், கடந்த ஜூலை முதல், ஆறு மாதங்களாக உரிமை கட்டணம் செலுத்தாததால், தனியாருக்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.அதனால், கடந்த சில நாட்களுக்கு முன், இந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.தற்போது, சென்னை மார்க்கத்தில் உள்ள தனியார் உணவகங்களில், போதிய கழிப்பறை மற்றும் சுகாதாரமற்ற இடங்களில் ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தி செல்கின்றனர்.தனியார் உணவகங்களில், கூடுதல் விலையில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, உடனடியாக பயண வழி உணவகத்தை பேருந்து பயணியர் நலன் கருதி திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
07-Feb-2025