உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலம்

திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலம்

திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரசித்திபெற்ற கோவிலாக திருப்போரூர்கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது.இங்கு, ஆண்டுதோறும் மாசி கிருத்திகை விழா,விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு இவ்விழா நேற்று நடந்தது.அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் மொட்டை அடித்து, சரவணப்பொய்கையில் நீராடி, கந்தனை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.பிரதான கிருத்திகையை ஒட்டி, மாடவீதி, ஓ.எம்.ஆர்., சாலைகளில் உள்ள திருமண மண்டபங்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.காவடி மண்டபத்திலிருந்து பல விதமான காவடிகள் புறப்பாடு, மாடவீதிகளில் சென்றன. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் வழிபட்டனர்.செங்கை, காஞ்சி, சென்னை மாவட்டம் மட்டும் இன்றி, வெளி மாவட்டங்களிலிருந்தும், பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வைஒட்டி, அதிக மதிப்பெண்பெற்று வெற்றி பெற வேண்டி கந்தனை வழிபட்டு செய்துவிட்டு சென்றனர்.விழாவில் ஓ.எம்.ஆர்., சாலை, மாடவீதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக காணப்பட்டது. திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை