மாசி மகம் தீர்த்தவாரி எடையாளத்தில் விமரிசை
அச்சிறுபாக்கம்:எடையாளத்தில், மாசி மகம் தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடந்தது.அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகையில், 5,300 ஆண்டுகள் பழமையான பெரும்பேர் கண்டிகை மலை மீது, தெற்கு நோக்கி காட்சியளிக்கும் வள்ளி, தெய்வானை சமேத சர்வசத்ரு சம்ஹார ஷண்முக சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.தற்போது கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.நேற்று, மாசி மகத்தையொட்டி, எடையாளம் ஆற்றங்கரையில், தீர்த்தவாரி நிகழ்வு நடந்தது.பின், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையும், மஹா தீபாராதனையும் நடந்தது.விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஏராளமான பக்தர்கள் மாசி மகத்தை ஒட்டி ஆற்றில் குளித்து, பின், முருகனை வழிபட்டுச் சென்றனர்.விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சர்வசத்ரு சம்ஹார ஷண்முக சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா நடந்தது.வீடுதோறும், பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.