உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொபைல் போன் பறிப்பு ; 2 வாலிபர்கள் கைது

மொபைல் போன் பறிப்பு ; 2 வாலிபர்கள் கைது

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன், 40. அப்பகுதியில் காயலான் கடை வைத்துள்ளார்.இவர், நேற்று முன்தினம் புதுப்பாக்கம் ராதா சாலையில் நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், பாலசுப்பிரமணியனிடம் முகவரி கேட்பதுபோல் பேச்சு கொடுத்து, அவரிடம் இருந்த விவோ மொபைல் போனை பறிக்க முயன்றனர்.அவர், மொபைல் போனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். உடனே, அருகே இருந்தவர்கள் மர்ம நபர்களை மடக்கி பிடித்து, கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில், பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், 23, உதயா, 19, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ