மேலும் செய்திகள்
வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா
02-Sep-2024
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் முத்துவேல் நகரில், ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், 28ம் ஆண்டு கொடை திருவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை பந்தக்கால் நடப்பட்டு, கோவில் கொடை விழா நடந்து வந்தது.கொடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மனுக்கு, பலவிதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் செய்யப்பட்டது.அதன்பின், கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், வாண வேடிக்கையுடன் சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை, முத்தாரம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.
02-Sep-2024