மேட்டுத்தெருவில் பள்ளம் வாகன ஓட்டிகள் திக்... திக்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மேட்டுத்தெருவில், காய்கறி, மளிகை உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. செங்கல்பட்டைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் நகரவாசிகள் காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். இப்பகுதி சாலையின் நடுவே திறந்த நிலையில் பள்ளம் உள்ளது. இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கமால், கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சாலை நடுவே உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.