உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுப்பட்டினம் செங்கை மகளிர் இலவச பஸ் இயக்கம்

புதுப்பட்டினம் செங்கை மகளிர் இலவச பஸ் இயக்கம்

புதுப்பட்டினம், கல்பாக்கம், புதுப்பட்டினம் அருகில், ஆயப்பாக்கம், நல்லாத்துார், நெரும்பூர் ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியினர், அத்யாவசியப் பொருட்கள், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு, திருக்கழுக்குன்றம், புதுப்பட்டினம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.இத்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் தடம் எண் 212ஜி, தனியார் பஸ் நீண்ட காலத்திற்கு முன் நிறுத்தப்பட்டன. தற்போது, ஷேர் ஆட்டோவில், கூடுதல் கட்டணம், விபத்து அபாயத்துடன் செல்கின்றனர். இத்தடத்தில், பெண்கள் இலவச பஸ் இயக்குமாறு, இப்பகுதியினர் வலியுறுத்தினர்.இதையடுத்து, கல்பாக்கம் பணிமனை நிர்வாகம், தடம் எண் டி2 என்ற மகளிர் இலவச பஸ் இயங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ